சதீலமாய் ஒருவன் டீசர்
sathelam

டீசர் 2
சதீலமாய் ஒருவன் !!
பஞ்சாப் அரண்மனை வீடு திருமண களை கட்டி ஆட்டம் பாட்டம் டிஜே என கோலாகலமாக இருந்தது ..
ஆனால் ஒருத்தி மட்டும் அரண்மனை உச்சியில் நின்று கண்ணில் வடிந்த கண்ணீரை துடைக்க துடைக்க அருவியாக பெருகி ஓடியது ... போன் அதிர போனை குனிந்து பார்த்தாள் .. நாளை அவள் கழுத்தில் தாலியீட போகும் சந்துரு சிரித்தபடி அவளை அணைத்து கொண்டு நின்றான் . ... யோசனையாக அதை பார்த்து கொண்டே இருந்த நயனி போனை எடுத்து ..
சந்துரு ..
ஹேய் என்ன பண்ணிட்டு இருக்க, நாங்க வந்துட்டோம் வந்து ரிசிவ் பண்ணவே இல்லை ஹான் .
ப்ச் உங்கள பார்க்கணும் சந்துரு
பொண்ணுக்கு அவ்வளவு அவசரமா அப்போ இத்தனை நாள் கேட்டதை தராம டக்கால்டி காட்டின இன்னைக்கு கொடுக்க போறியா பேபி
ப்ச் ப்ளீஸ் சந்துரு உங்கிட்ட பேசணும்..
என்னாச்சு ?
மொட்டை மடியில இருக்கேன் வாங்களேன்..
ம்ம் நயனி கையை குறுக்க கட்டி கொண்டு நின்றவள் பின்னே சத்தம் கேட்டு திரும்ப , சந்துரு சிரித்தபடி நிற்க , சடுதியாய் ஓடி போய் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.. முதல் அணைப்பு...
சந்துரு எனக்கு பயமா இருக்கு ,
என்னாச்சி ?
அது அது நான் ஒன்னும் சொல்லுவேன், என்ன பைத்தியம்னு நினைக்க கூடாது சரியா?
ம்ம்
ஐஞ்சு வருடத்துக்கு முன்ன செத்து போன ஒருத்தன் ..
ம்ம்
ஆவியா என்ன விடாம துரத்துறான் சந்துரு ..
வாட் ஆவியாவா ஹாஹா என்ன காமெடி பண்ற..
அய்யோ சத்தியம் நம்புங்க
யூ ஆர் ஏ டாக்டர் நயனிகா , இதெல்லாம் நம்புறியா என்ன ?
பார்த்தியா கிண்டல் பண்ற , வேண்டாம் விடு போ என்று அவள் விலக போக
சரி சரி நம்புறேன், என்ன பண்ணணும் நயனி... அந்த எக்ஸ் வந்து என்ன சொல்றான் நயனி அவன் பேச்சில் சற்று கிண்டல் தெரிந்தது...
தெரியல, உன் கூட உன் சம்மதத்தோடு தப்பா இருப்பேன்னு உன் வயித்துல என் குழந்தை பிறக்கும்னு, என்கிட்டேயே சொல்லிட்டு போறான் நடுங்கினாள்...
பிள்ளைதான நயனி பெத்து கொடுத்திடு என்று சந்துரு சிரிக்க , அவள் முறைத்து கொண்டே திரும்பி விட
சரி விடு போய் தூங்கு நான் பார்த்துக்கிறேன் அவன் நம்பவில்லை என்று அறிந்தவள் , இனி பேசி பயன் இல்லை என நினைத்து
சரி நீ போ சந்துரு , நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன் ..
ஷூயர்
யா என தனியாக நின்று சிந்தனையின் பிடியில் சிக்கி தவிக்க சில்லென்று காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது... தன் பின்னே காலடி சத்தம் கேட்டு அதிர்ந்து அவள் திரும்ப சந்துரு நின்றான் ..
என்ன ..
இல்லை கூப்பிட்டு விட்டியாம் , தங்கச்சி சொன்னா அதான் வந்தேன் ஆர் யூ ஆல் ரைட் ?
வாட் ? இப்பதான் வர்றீங்களா ?
ம்ம் ,
அப்ப இதுக்கு முன்ன பேசியது யாரு ?
நான் எப்போ வந்தேன், நான இப்பதான் மேலே வர்றேன் என்றதும் நயனி நெஞ்சை பிடித்து கொண்டு ஒரு இடத்தை அதிர்ந்து பார்க்க, அங்கே இருட்டில் சந்துரு உருவத்தில் கையை கட்டி கொண்டு கண்கள் அவளை மட்டும் பார்க்க அவன் நின்றான் ....
சந்துரு அங்க அங்க ?
எங்க எவன் என அவன் நயனி காட்டிய இடத்தை நோக்கி காற்று குப்பையோடு சுழண்டு பறந்து விட்டது
அங்க அங்க என அவள் கையை நீட்டி பின்னால் திரும்ப சந்துரு கோணலாக சிரிக்க ,
யாரை தேடுற நயனி என்னையா ? ம்ம் , அவ்வளவு அவசரமா லவ்வி ? என்ன குழந்தை பெத்துக்க சம்மதமா நயனி என அவள் அருகே அவன் நடக்க ஆரம்பிக்க
அவள் பயந்து பின்னால் நடக்க கால் தடுமாறி மாடியில் இருந்து தவறி விழ போக அவன் கைகள் அவளை இழுத்து பிடித்து தூக்கியது...
இப்பவே செத்தா எப்படி நயனி , இன்னும் இருக்கே நீயே சாக வேண்டாம், உன்ன அணு அணுவா அனுபவிச்சு துடிக்க வச்சி, நானே கொல்லுவேன்...
உ...ன...க்கு என்ன வேணும்
சிம்பிள் நீதான் ....
ஹான்
யா , நீ வேணும் உன் உடம்பு வேணும், நீ தர்ற சுகம் வேணும் தட்ஸ் இட், அவள் அரண்டு போய் அவனை பார்த்திட..
நாளைக்கு என்ன பண்ற இந்த கல்யாணம் வேண்டாம்னு தடுத்து நிறுத்திற, நிறுத்தணும் என்றான் அழுத்த குரலில் ...
இல்ல உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன், ஐயம் ஏ பேட் பாய் என கண்ணை சிமிட்டினான் பஞ்சோந்தி மனிதன்..
அவள் தாய் உருவம் தந்தை உருவம் அவள் உருவம் சந்துரு உருவம் என ஒரே முகத்தில் பல முகங்கள் மாறி மாறி வந்து போக...
ஆஆஆஆஆ நயனி பயந்து அதே இடத்தில் உணர்வு இல்லாது சுருண்டு விழ ..
நயனி என்று அழைத்து கொண்டே அவள் தோழி மேலே வர உடனே தன் உருவத்தை மாற்றி கொண்டான் அவன் ...
அவ ரெஸ்ட் எடுக்கிறா பொண்ணு , நீ கீழ வெயிட் பண்ணு என்று நயனி தாயின் உருவத்தில் மாறி நின்ற அவன் கூறவும்
ஓஓஓ ஓகே ஆன்டி என அவள் கீழே செல்ல.. மயங்கி கிடந்த அவளை அவன் காலால் எட்டி உதைக்க, நயனி படிக்கட்டில் தடதடவென உருண்டு விழுந்தாள்...
நினைத்த இடத்தில் நினைத்த ரூபத்தில் நினைத்தது எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற ஒருவன் ...
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
திரும்பும் திசை எங்கும் இருப்பான்
அவளுக்கு தீமை செய்யவே
சதீலமாய் சுற்றி திரியும் ஒருவன்...